பால் குட ஊர்வலம்


பால் குட ஊர்வலம்
x

மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள கோனேரி கங்கையம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம் நடந்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள கோனேரி கங்கையம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி பால் குட ஊர்வலம் மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோவில் வளாகத்தில் அம்மன் வீதி உலாவுடன் புறப்பட்ட பால்குட ஊர்வலம், மேற்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை வீதி, பஸ் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை சென்றடைந்தது. அங்கு பால் குடம் சுமந்து வந்த பெண்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கினர். பின்னர் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அலங்கார தேர் வீதி உலாவில் மின் விளக்கு அலங்கார கோலத்தில் கங்கையம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

எந்திரம் பொருத்தப்பட்டு வித்தியாசமான கோலத்தில் சிவலிங்கம் மீது அம்மன் பாலாபிஷேகம் செய்வது போன்ற கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் அமைக்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story