அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு


அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
x

சரசுவதிமகால் நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்


சரசுவதிமகால் நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

தஞ்சை சரசுவதிமகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், சரசுவதிமகால் நூலக தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்றுகாலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது அவர், நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன, எத்தனை ஓலைச்சுவடிகள் உள்ளன, இதுவரை எத்தனை நூல்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன என்பதை கேட்டறிந்தார். பின்னர் அவர், சுவடியியல்பிரிவு, விற்பனை பிரிவு, அருங்காட்சியகம் உள்ளிட்டவைகளுக்கு சென்று அங்கு இருப்பவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோரிக்கைகள்

தொடர்ந்து அவர், ஒலி-ஒளி காட்சிகளை பார்வையிட்டார். பின்னர் அவர், நூலக மேம்பாட்டிற்கு என்னென்ன தேவை என்பதையும் அலுவலர்களிடம் கேட்டார். அப்போது அவர்கள், நூலகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், நூலக பணியாளர்களுக்கு 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.இதை கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உங்களது கோரிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.ஆய்வின்போது டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., சரசுவதிமகால் நூலக நிர்வாக அலுவலர் முத்தையா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார், நூலகர் சுதர்சன், தமிழ் பண்டிதர் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story