அன்னை மரியாள் சொரூபம் ஊட்டிக்கு வந்தது


அன்னை மரியாள் சொரூபம் ஊட்டிக்கு வந்தது
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:17:34+05:30)

கேரளாவில் இருந்து அன்னை மரியாள் சொரூபம் ஊட்டிக்கு வந்தது.

நீலகிரி

ஊட்டி,

கேரள மாநிலம் மானந்தவாடி மறை மாவட்டம் தொடங்கப்பட்டு, வருகிற மே 1-ந் தேதி பொன் விழா (50-வது ஆண்டு) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்னை மரியாளின் சொரூபம் மானந்தவாடி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஆலயங்களுக்கும் பவனியாக எடுத்து வரப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை, ஜெபமாலை மற்றும் திருப்பலி நடைபெறுகிறது. இதனை மானந்தவாடி மறை மாவட்ட ஆயர் ஜோசப் தொடங்கி வைத்தார். இந்தநிலையில் கேரளாவில் இருந்து அன்னை மரியாள் சொரூபம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 12 ஆலயங்களுக்கு பவனியாக கொண்டு செல்லப்படுகிறது. நேற்று முன்தினம் 10-வது ஆலயமான ஊட்டி புனித சூசையப்பர் ஆலயத்திற்கு சொரூபம் வந்தது. ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து, ஜெபமாலை வழிபாட்டை தொடங்கி வைத்தார். பங்கு தந்தை சிஜோ ஜார்ஜ், குன்னூர் புனித செபாஸ்டின் ஆலய பங்கு தந்தை மார்ட்டின் கலந்துகொண்டனர். தொடர்ந்து அன்னையின் சொரூபம் வயநாடு மற்றும் நிலம்பூர் ஆலயங்களுக்கு செல்கிறது.


Next Story