மோட்டார் சைக்கிள் - கார் மோதல்; தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் - கார் மோதல்; தொழிலாளி பலி
x

பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை, பிப்.1-

பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.

கார் மோதி சாவு

பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(வயது45). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் ஊரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்தார். அப்போது, அவரது மோட்டார் சைக்கிளின் மீது, அந்த வழியாக வேகமாக வந்த சிவப்பு நிற கார் மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆரோக்கியராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

விசாரணை

இது குறித்து ஆரோக்கியராஜ் மனைவி அந்தோணியம்மா (வயது40) பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார்.இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாய தொழிலாளி மீது மோதிய சிவப்பு நிற காரை ஓட்டி வந்தது யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? இந்த கார் யாருக்கு சொந்தமானது? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story