தக்கலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பலியான வாலிபர் அடையாளம் தெரிந்தது


தக்கலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்:  பலியான வாலிபர் அடையாளம் தெரிந்தது
x

தக்கலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பலியான வாலிபர் அடையாளம் தெரிந்தது

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை பழைய பஸ் நிலைய பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இதில் ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த கவின் (வயது31) என்பவர் படுகாயமடைந்த நிலையில் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இறந்தவரின் பெயர், விவரங்கள் முதலில் தெரியாமல் இருந்தது. இதுகுறித்து தக்கலை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் தக்கலை அருேக உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சார்ந்த தபசுமால் (30) என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. முத்தலக்குறிச்சியில் உள்ள குடிநீர் தயாரிக்கும் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தபசுமாலும், வட்டம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் (30), சோபின் (30), கவின் (31) ஆகிேயாரும் அழகியமண்டபத்தில் உள்ள ஓட்டலில் உணவருந்தி விட்டு 2 மோட்டார் சைக்கிள்களில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் வந்த ேபாது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதியது.

இதில் தபசுமாலு தூக்கி வீசப்பட்டு இறந்துள்ளார். கவின் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களுடன் வந்த மற்ற 2 பேரும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story