தேசிய பெண் குழந்தைகள் தின விழா


தேசிய பெண் குழந்தைகள் தின விழா
x

லத்தேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பம் அருகே லத்தேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஹேண்ட் இன் ஹேண்ட், சைல்டு லைன் 1098 மூலமாக தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மைதிலி முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சித்ரா, ஊர் நல அலுவலர் நாகரத்தினம், ஆலயம் குடிபோதை மறுவாழ்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, குழந்தை திருமண தடைச்சட்டம், பாலியல் குற்றங்கள் சார்ந்த பிரச்சினைகள், குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவை குறித்து பேசினர்.

தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. முடிவில் சைல்டு லைன் ஒன்றிய அலுவலர் மகாலட்சுமி நன்றி கூறினார்.


Next Story