வாணியம்பாடியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி


வாணியம்பாடியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி
x

வாணியம்பாடியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப் போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு வாசகங்களுடன் கோலம் போட்டனர்.

இதனை நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன், ஆணையாளர் மாரி செல்வி ஆகியோர் பார்வையிட்டார். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சிறப்பு பரிசும், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

முன்னதாக நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் தலைமையில் ஆணையாளர் மாரி செல்வி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ். சாரதி குமார் உள்ளிட்டோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.


Next Story