தேரோட்டத்துக்கு தயாராகும் நெல்லையப்பர் கோவில் தேர்


தேரோட்டத்துக்கு தயாராகும் நெல்லையப்பர் கோவில் தேர்
x

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்துக்கு தேர்களை தயார் படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்துக்கு தேர்களை தயார் படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

ஆனிப்பெருந்திருவிழா

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கால் கோவில்களில் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தடை விலக்கப்பட்ட பிறகு நெல்லையப்பர் கோவிலில் தொடர் பூஜை, விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலின் மிகப்பெரிய திருவிழாவான ஆனிப்பெருந்திருவிழா நடைபெற இருக்கிறது.

இந்த திருவிழா வருகிற 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து செய்து வருகிறது

தயாராகும் தேர்கள்

தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் ஓடும். தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரதவீதிகளுக்கு வருவார்கள்.

இதில் சுவாமி தேர் ஆசியாவிலேயே அதிக எடைகொண்டதாகவும், தமிழகத்தில் 3-வது பெரிய தேராகவும் இந்த தேர் உள்ளது. இந்த தேர்களை தேரோட்டத்துக்கு தயார் படுத்தும் பணி நேற்று தொடங்கியது. தேர் பாதுகாப்பு கருதியும், பக்தர்கள் தேரை வெளியே இருந்து பார்க்க வசதியாகவும் கண்ணாடி இழையால் மூடி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை நேற்று கோவில் ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.


Next Story