வீடு, அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்-60 பேர் கைது

வீடு, அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு:  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்-60 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:45 PM GMT)

வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை (என்.ஐ.ஏ.) நடத்துவதை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீலகிரியில் பல இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

கூடலூர்

அதிரடி சோதனை

கேரளா, கோவை உள்பட நாடு முழுவதும் பல மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், அதன் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும் சிலரை கைது செய்தனர்.

இதை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர் உள்பட பல இடங்களில் மறியல் நடைபெற்றது. கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் மதியம் 1 மணிக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

60 பேர் கைது

இருப்பினும் தொடர்ந்து மறியல் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடித்து இழுத்து அப்புறப்படுத்தினர். பின்னர் 34 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து கூடலூர் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் ஊட்டி மற்றும் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story