நூல் விலையில் மாற்றமில்லை


நூல் விலையில் மாற்றமில்லை
x

நூல் விலையில் மாற்றமில்லை

திருப்பூர்

திருப்பூர்

பனியன் தொழிலில் முக்கிய மூலப்பொருளான நூல் விலையில் இந்த மாதம் மாற்றமில்லை. கடந்த மாத விலையே தொடர்வதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதனால் பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பனியன் தொழில்

பனியன் தொழிலின் முக்கிய மூலப்பொருளாக நூல் விலை அபரிமிதமான உயர்வு காரணமாக திருப்பூரில் பனியன் தொழில் மந்தநிலையை சந்தித்துள்ளது. இந்தநிலையில் கடந்த 4 மாதமாக நூல் விலை உயராமல் குறைந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று நூல் விலையை நூற்பாலைகள் அறிவிக்கும். கடந்த மாத நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது.

பிப்ரவரி மாதத்துக்கான நூல் விலை நேற்று அறிவிக்கப்பட்டது. நூல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த மாத நூல் விலையே தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விலையில் மாற்றமில்லை

அதன்படி கோம்டு ரக நூல் (வரி நீங்கலாக) 16-ம் நம்பர் ரூ.251-க்கும், 20-ம் நம்பர் ரூ.254-க்கும், 24-ம் நம்பர் ரூ.264-க்கும், 30-ம் நம்பர் ரூ.274-க்கும், 34-ம் நம்பர் ரூ.287-க்கும், 40-ம் நம்பர் ரூ.307 ஆகவும் உள்ளது. செமி கோம்டு ரகம் 16-ம் நம்பர் ரூ.241-க்கும், 20-ம் நம்பர் ரூ.244-க்கும், 24-ம் நம்பர் ரூ.254-க்கும், 30-ம் நம்பர் ரூ.264-க்கும், 34-ம் நம்பர் ரூ.277-க்கும், 40-ம் நம்பர் ரூ.297-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரி நீங்கலாக இந்த விலையில் நூல் விற்பனை செய்யப்படும் என்று நூற்பாலைகள் அறிவித்துள்ளன.

கடந்த 4 மாதமாக நூல் விலை உயராமல் குறைந்து வருவது பனியன் தொழில் துறையினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. ஆனால் போதுமான ஆர்டர்கள் வருகை இன்னும் இல்லாததால், நூல் நுகர்வு குறைவு காரணமாக நூற்பாலைகள் விலை குறைத்து வருகிறது. ஆர்டர்கள் அதிகரிக்கும்போதும் நூல் விலையை இதே போல் உயர்த்தாமல் இருந்தால் பனியன் தொழில் மேம்படும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

----


Next Story