நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதை. இவரது மகள் பார்வதி (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 2-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்துள்ளார். இந்நிலையில் பார்வதியை அவரது அப்பா மருதை நேற்று மாலை விடுதியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் மருதை வயலுக்கு சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பார்வதி வீட்டில் மின்விசிறியில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்வதியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார்?, விடுதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா? அல்லது குடும்ப பிரச்சினையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story