விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும்- துணை இயக்குனர்


விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும்- துணை இயக்குனர்
x

விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர்

விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

கோடை உழவு

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை உழவு என்பது கோடை காலத்தில் செய்யப்படும் வேளாண்மை பணி ஆகும். கோடை காலத்தில் மழை குறைவாக இருக்கும். கால்வாய்ப் பாசன வசதி பெறும் ஊர்களில் கால்வாயிலும் நீர் வரத்து இருக்காது. சிற்றூர்களில் கிணற்றுப் பாசன வசதி உள்ளவர்கள் மட்டுமே கோடை உழவு செய்ய முடியும். மற்றவர்கள் நிலத்தை தரிசாக விடுவர்.

சிலர் தரிசாக இருக்கும் நிலத்தில் மானாவாரிப் பயிர்களை இடுவர். எள், பயறு வகைகள், கேழ்வரகு, குதிரைவாலி போன்றவை கோடை விவசாயத்தில் பயிரிடப்படுகின்றன. தமிழகஅரசின் வேளாண்மைத் துறை விவசாயிகள் இடையே கோடை உழவின் முக்கியத்துவம் குறித்து பயிற்சிகளின் போது விவசாயிகளுக்கு ஆலோசனைகளை கூறி வருகிறது.

களைகள் கட்டுப்படும்

கோடை உழவு மண்வளத்தை அதிகரிக்கும். நைட்ரஜன் நிலைப்படுத்தும். அடுத்த சாகுபடிக்கான உரத்தேவையைக் குறைக்கும். நீரை நிலத்தில் தக்க வைக்கும். பூச்சித் தொல்லையை குறைக்கும். கோடை உழவு செய்வதால் பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் கோடை உழவு செய்யப்படாத வயல்களில் மேல்மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணில் உள்ள ஊட்டங்களும் விரையமாகும்.

கோடை உழவில் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழைநீர் சேகரிக்கபடுவதால் நிலபரப்பின் கீழ் ஈரப்பதம் காக்கப்பட்டு, பூச்சிகள் மற்றும் பூஞ்சான்கள் கட்டுபடுத்தப்படுகிறது. கோடை உழவு செய்வதால் முன் பருவ விதைப்புக்கு ஏதுவாகிறது. ஏற்கனவே உழுத வயலில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாவதோடு, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் கூடுவதோடு விளைச்சலும் அதிகரிப்பதாக ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

கூட்டுப்புழுக்கள்

கோடையில் உழுவதால் மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பில் தள்ளப்பட்டு பறவைகளுக்கு இரையாக்கப்பட்டும், வெயிலிலும் கொல்லப்படுகிறது. மேலும் களைகளின் வேர்ப்பகுதி களையப்பட்டு முளைப்புதிறன் வெகுவாக குறைக்கப்டுகிறது. எனவே விவசாய பெருமக்கள் இந்த காலநிலையை பயன்படுத்தி விவசாய நிலத்தை வளமான நிலமாக மேம்படுத்தி கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story