வல்லம் பேரூராட்சி முன்மாதிரியாக தரம் உயர்த்தப்படும்


வல்லம் பேரூராட்சி முன்மாதிரியாக தரம் உயர்த்தப்படும்
x
தினத்தந்தி 14 Jan 2023 7:00 PM GMT (Updated: 2023-01-15T00:30:54+05:30)

வல்லம் பேரூராட்சி முன்மாதிரியாக தரம் உயர்த்தப்படும் என கூடுதல் இயக்குனர் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே உள்ள வல்லத்தில் நேற்று சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடி காரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உரம் விற்பனை மையத்தை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து வல்லம் வளம் மீட்பு பூங்காவை பார்வையிட்ட அவர் அதிகாரிகளிடம், 'வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் உரங்களுக்கு தேவையான நவீன எந்திரங்கள் வழங்கப்படும். வெளிநாட்டு வெளிமாநில, மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பூங்காவை பார்வையிடுவதற்கு தேவையான நவீன நிழற்குடை உள்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்படும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் வல்லம் பேரூராட்சியை முன்மாதிரி பேரூராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். அப்போது மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் கனகராஜ், மாவட்ட உதவி செயற் பொறியாளர் மாதவன், பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் பிரகந்தநாயகி, தி.மு.க. நகர செயலாளர் கல்யாணசுந்தரம், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story