25, 26-ந் தேதிகளில் ஈரோடு மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்; அமைச்சர் சு.முத்துசாமி தகவல்


25, 26-ந் தேதிகளில்  ஈரோடு மாவட்டத்துக்கு   முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்;  அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
x

ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற 25, 26-ந் தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற 25, 26-ந் தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

இல்லை என்று சொல்லாதவர்

ஈரோடு சத்தி ரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ஈரோடு புத்தக திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது:-

ஈரோடு மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகிறார். இதுவரை நமது மாவட்டத்துக்காக கேட்டு எதுவும் அவர் இல்லை என்று கூறியது இல்லை.

25, 26-ந் தேதிகளில் வருகிறார்

வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் ஈரோடு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். குறிப்பாக ஈரோடு சோலாரில் ரூ.100 கோடியில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட உள்ள புறநகர் பஸ் நிலைய பணிகளை 26-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றும் நடவடிக்கை சிறப்பாக நடந்து வருகிறது. ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும் முழுமையான அரசு கல்லூரியாக மாற்றப்படும். இங்கு சிறப்பான ஒரு உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது. கனிராவுத்தர் குளத்தில் புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. இதுபோன்று ஈரோடு மாவட்டத்துக்கு 85 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. இந்த திட்டங்கள் நிறைவேறும்போது நமது மாவட்டம் மிகச்சிறந்த வளர்ச்சியை அடையும்.

இடையூறு கூடாது

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை மட்டுமே சிந்தித்து நிறைவேற்றி வருகிறார். பதாகைகள் வைப்பது, கொடி கட்டுவது போன்ற மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எதுவும் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.

10 ஆண்டுகளாகவே அவருக்கு அன்பளிப்பாக புத்தகங்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி, அதன் மூலம் பெறப்பட்ட புத்தகங்களை தமிழகம் முழுவதும் நூலங்களுக்கு வழங்கி வருகிறார். இந்த புத்தக திருவிழாவுக்கும் 1,500 புத்தகங்கள் வழங்கி உள்ளார்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.


Next Story