ஆகஸ்டு 20-ந் தேதி மாநாடு 11 மாவட்டங்களில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


ஆகஸ்டு 20-ந் தேதி மாநாடு 11 மாவட்டங்களில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி 11 மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு ஆகஸ்டு 20-ந் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு சிறப்புடனும், எழுச்சியுடனும் நடைபெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, மூத்த தலைமைக்கழக செயலாளர்கள் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு பின்வரும் கால அட்டவணைப்படி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்.

அதன்படி, வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம், உலகநாதபுரத்தில் உள்ள ஏ.பி.ஷா மஹாலிலும், பிற்பகல் 2.30 மணிக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்து மஹாலிலும், 29-ந் தேதி காலை 10.30 மணிக்கு விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள ஜாபோஸ் காஞ்சனா திருமண மண்டபத்திலும், பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் கல்லூரி எதிரில் அமைந்துள்ள மாணிக்கம் மஹாலிலும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.

ஆலோசனை கூட்டங்கள்

மேலும், 30-ந் தேதி காலை 10.30 மணிக்கு நெல்லை மாவட்டம் கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையிலும், பிற்பகல் 3 மணிக்கு தென்காசி மாவட்டம் வாய்க்கால் பாலத்தில் உள்ள இசக்கி மஹாலிலும், 31-ந் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்டம் முனிசிபல் ஆபிஸ் எதிரில் உள்ள வி.கே.வேலுச்சாமி திருமண மண்டபத்திலும், பிற்பகல் 3 மணிக்கு மதுரை மாவட்டம் கருப்பசாமி கோவில் எதிரில் உள்ள மாநாட்டு மைதானத்திலும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.

தொடர்ந்து, ஆகஸ்டு 1-ந் தேதி காலை 10.30 மணிக்கு புதுக்கோட்டை மவாட்டத்தில் உள்ள மஹாராஜா மஹாலிலும், பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சி மாவட்டம் கருமண்டபத்தில் உள்ள எஸ்.பி.எஸ்.மஹாலிலும், 2-ந் தேதி காலை 10 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள ஒய்.ஆர்.மஹாலிலும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக செயலாளர்கள்ஆலோசனை கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.

இந்த ஆலோசனை கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story