அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதி


அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதி
x

அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

அரசு பஸ் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

நாட்டறம்பள்ளி வழியாக தகரகுப்பம் வரை செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அந்த பஸ் நேற்று மாலை 4 மணியளவில் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது. பழுதை சரி செய்ய டிரைவர் முயன்றும் முடியவில்லை.

மாற்று ஏற்பாடும் செய்யப்படாததால் நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைந்த பயணிகள் வேறு வழியின்றி அவ்வழியாக சென்ற மற்றொரு பஸ் மூலமும் வேறு சிலர் ஆட்டோ மூலமும் சென்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பஸ்களின் நிலைமை இதுபோன்றுதான் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதை சரி செய்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story