சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்
சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது
தென்காசி
சிவகிரி:
சிவகிரி வடகால் கண்மாய் குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கபடி விளையாட்டின்போது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சிவகிரி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தாசில்தார் செல்வகுமார் தலைமை தாங்கினார். புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வாசகங்களுடன் கூடிய ஆடைகள், கயிறு அணிவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்று கொண்டனர்.
Related Tags :
Next Story