பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்


பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 14 Sept 2023 2:15 AM IST (Updated: 14 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

போடியில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தேனி

பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று போடி காமராஜர் பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள ஓட்டல், வணிக நிறுவனங்கள், கடைகள், இறைச்சி கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ரூ.12 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் கடைகளில் வைத்திருந்த 120 பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தினால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.


Related Tags :
Next Story