நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் மாற்று இடம் கேட்டு மனு


நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் மாற்று இடம் கேட்டு மனு
x

நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் மாற்று இடம் கேட்டு மனு வழங்கினர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி தர்ஜிபேட்டையில் உள்ள பாலாற்றின் கிளையாறு மற்றும் ஏரிக்கு செல்லும் கால்வாய்கள் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஐகோர்ட்டு உத்தரவின் படி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வருவாய்த் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதனால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமாரிடம் முறையிட்டனர். இதனையடுத்து அவர் பொதுமக்களை அழைத்து சென்று வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதாவிடம் பொதுமக்களின் மனுக்களை வழங்கினார். இதனையடுத்து நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் நேதாஜி நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தருவதாகவும், அதற்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் செலுத்த வேண்டும். அதை தவணை முறையிலும் செலுத்தலாம் என்று கோட்டாட்சியர் கூறினார். அவ்வளவு தொகை கட்ட முடியாது எனவும், அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள காலி இடத்தை ஒதுக்கித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி கூறினார்.

அப்போது நகர செயலாளர் சதாசிவம், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி, செல்வராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story