சுரண்டையில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி நகரசபை ஆணையாளரிடம் மனு


சுரண்டையில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி நகரசபை ஆணையாளரிடம் மனு
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:17:02+05:30)

சுரண்டையில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி நகரசபை ஆணையாளரிடம் கவுன்சிலர்கள் மனு கொடுத்து உள்ளனர்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நகராட்சி கவுன்சிலர்கள் பரமசிவன், அந்தோணி சுதா, அம்சா பேகம், கல்பனா அன்ன பிரகாசம் ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. நாய்களின் இனப்பெருக்க காலம் என்பதால் அவை பல்கி பெருகி கூட்டம் கூட்டமாக அலைகின்றன. தெருவில் செல்லும் சிறுவர்-சிறுமிகள், முதியவர்கள் உள்ளிட்டோரை நாய்கள் விரட்டி கடிக்க செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Next Story