பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்


பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்
x

வருகிற 22-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

திருப்பூர்

அவினாசி

வருகிற 22-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

என் குப்பை எனது பொறுப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை அவினாசி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் பொ.தனலட்சுமி தலைமை தாங்கினார். துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.

இதில் அவினாசி பகுதியை சேர்ந்த மளிகை, ஓட்டல், பேக்கரி, இறைச்சிக் கடை உள்ளிட்ட கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர். அப்போது பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி பேசியதாவது:-

ரூ.1 லட்சம் அபராதம்

சட்டமன்றத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டதாக அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே அனைத்து வணிக நிறுவனங்களிலும் வருகிற 22-ந் தேதிக்கு பிறகு கண்டிப்பாக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து துணிப்பைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதிக அளவில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அட்டை பெட்டிகளை பயன்படுத்தலாம். எனவே 22-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உற்பத்தியை நிறுத்த வேண்டும்

ஆலோசனை கூட்டத்தில் மளிகை கடை உரிமையாளர் தங்கவேல் என்பவர் பேசுகையில், பலசரக்கு வியாபாரிகள் சந்தையில் நான்கு விதமான பொருட்களை வாங்கி விற்பனை செய்வது தவிர்க்க முடியாதமை ஆகிவிட்டது. எனவே பிளாஸ்டிக் தயாரிப்புகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டால் யாரும் பிளாஸ்டிக் பயன்படுத்த வாய்ப்பில்லை. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பொருட்கள் வாங்க வருபவர்கள் கையில் துணிப்பையுடன் வருவார்கள். பிளாஸ்டிக் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தும்பட்சத்தில் அதே பழைய முறைப்படி அனைவரும் துணிப்பையை பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்துவிடும். என்றார்.


Related Tags :
Next Story