பா.ம.க. செயற்குழு கூட்டம்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. சபரி கிரிசன் உள்ளிட்ட ஒன்றிய, நகர செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே. முரளி, மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, வக்கீல் ஜானகிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள்.
அக்டோபர் மாதம் 1-ந் தேதி வருகை தரும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்சார கட்டணம், வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெற கேட்டுக் கொள்வது, ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்துவது என முடிவு செய்துள்ளதை, தமிழக அரசு தடுத்து, தமிழக விவசாயிகள் நலனை காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.