ஆசை வார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
ஆசை வார்த்தைக்கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை
ஆசை வார்த்தைக்கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிளஸ்-1 மாணவி
கோபி பகுதிைய சேர்ந்த 16 வயது மாணவி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் சதீஸ்குமார் (வயது 19). தொழிலாளியான இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோபி பஸ் நிலையத்துக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு பஸ் ஏற வந்த பிளஸ்-1 மாணவியிடம் சதீஸ்குமார் பேசி உள்ளார்.
கர்ப்பம்
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் 2 பேரும் தொடர்ந்து பேசி வந்து உள்ளனர். ஒரு கட்டத்தில் ஆசை வார்த்தைக்கூறி மாணவியை சதீஸ்குமார் பெருந்துறை அருகே உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு வைத்து மாணவியை சதீஸ்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பம் ஆனார். இதனிடையே மாணவி வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்து உள்ளார். இந்த நிலையில் மாணவி அடிக்கடி மயக்கம்போட்டு கீழே விழுந்து உள்ளார். இதில் பயந்து போன பெற்றோர், அந்த மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
கைது
இதையடுத்து மாணவியிடம் இதுபற்றி பெற்றோர் விசாரித்து உள்ளனர். அப்போது நடந்த விவரங்களை பெற்றோரிடம் அந்த மாணவி கூறி உள்ளார். அப்போது ஆசை வார்த்தைக்கூறி மாணவியை சதீஸ்குமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் இதுபற்றி பெருந்துறை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சதீஸ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் ஈரோடு மகிளா கோா்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சதீஸ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.