வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியின் பின்னால் அரசியல் காரணங்களும், சதிகளும் உள்ளன


வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியின் பின்னால் அரசியல் காரணங்களும், சதிகளும் உள்ளன
x

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியின் பின்னால் அரசியல் காரணங்களும், சதிகளும் உள்ளன என்று பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர்

திருப்பூர்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியின் பின்னால் அரசியல் காரணங்களும், சதிகளும் உள்ளன என்று பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர்

கல்யாணராமன் திருப்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

ஒருங்கிணைப்பு கூட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் வடமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் சிறுபூலுவப்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி தலைமை தாங்கினார்.

மாநில செயற்கு உறுப்பினர் கல்யாணராமன், விருந்தோம்பல் பிரிவு செயலாளர் பரசுராம் பாண்டே, மாநில செயலாளர் மலர்க்கொடி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு வடமாநில தொழிலாளர்களுக்கு புரியும் வகையில் இந்தியில் பேசினார்கள்.

தொழிலாளர்களின் செல்போன் எண்கள்

கூட்டத்தில் கல்யாணராமன் பேசுகையில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வதந்தி பரவிய நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக பணியாற்றும் திருப்பூரில் தொழிலாளர்கள் மனதில் இருக்கும் குழப்பங்களையும், அச்சத்தையும் போக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையிலும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் தொழிலாளர்களின் செல்போன் எண்கள் பெறப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர்கள் பாலு, குணசேகரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணி, காடேஸ்வரா தங்கராஜ், மாவட்ட பொருளாளர் நடராஜ், இணை பொருளாளர் ரவிக்குமார் உள்பட மாநில, மாவட்ட, மண்டல, அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் காரணங்களும், சதிகளும்

தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை நடந்து விட்டது போன்றும், அவர்கள் தமிழ்நாட்டில் வாழவே முடியாது என்ற நிலை உருவாகி விட்டது போன்றும் பல வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. ஏதோ ஒரு கலவர சூழ்நிலை இருப்பது போன்ற ஒரு கற்பனையும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வதந்தி வடமாநிலங்களில் அதிக அளவில் பரப்பப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக அழுத்தம் தரப்பட்டு வருகிறது. இதற்கு பின்னணியில் பல அரசியல் காரணங்களும், சதிகளும் உள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்த வரை இங்குள்ள முதலாளிகள் வடமாநில தொழிலாளர்களை தங்கள் குடும்பத்தினர் போன்றே பாவிக்கின்றனர். அவர்களது சம்பளத்தில் கூட எந்தவித பாகுபாடும் இல்லாமல் உள்ளூர் மக்களுக்கு வழங்குவது போல அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பான நிலையில் இருப்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை. இன்னும் எத்தனை பேர் வந்தாலும் வேலை வழங்கக்கூடிய சூழல் இங்கு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story