முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா


முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
x

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி;

கோவில்பட்டி செக்கடி தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் இரவு கோவில் முன்பிருந்து பக்தர் ஒருவர் 54 அக்னிச்சட்டி எடுத்து வீதி உலா வந்தார்.

முன்னதாக மற்றொரு பக்தர் 9 அடி நீள அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் கோவில் நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள், இளைஞர் அணியினர், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story