கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்


கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
x

டர்பன் பழுது காரணமாக கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது

திருநெல்வேலி

வள்ளியூர்:

டர்பனில் ஏற்பட்ட பழுது காரணமாக கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

டர்பனில் பழுது

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் நான்கு அணு உலைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் 2-வது அணு உலையில் டர்பனில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

மின் உற்பத்தி பாதிப்பு

டர்பனில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் அணுமின் நிலைய விஞ்ஞானிகளும், ஊழியர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், முதலாவது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story