தூத்துக்குடியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்மின் அழுத்த பாதைகளில் பழுதுகளை சீரமைத்தல், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தல், மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகள் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
இதனால் தூத்துக்குடி வெற்றிவேல் புரம், கருப்பட்டி சொசைட்டி ரவுண்டானா சுற்றியுள்ள பகுதிகள், மீனவர் காலனி வடபகுதி, சந்தைரோடு, கான்வென்ட் ரோடு, எஸ்.பி.ஜி கோவில் ரோடு 1,2,3 தெருக்கள், ஜார்ஜ்ரோடு, வடக்கு பீச் ரோடு, கருப்பசாமி கோவில் தெரு, நாடார் தெரு, வாத்தியார் தெரு, முத்துநாயக்கர் தெரு, எஸ்.எஸ். பிள்ளை தெரு தெற்குபகுதி, ஆதிபராசக்தி நகர், காளவாசல், தருவைகுளம், கோட்ஸ்நகர், அமுதா நகர், கணேசன் காலனி, முத்தையாபுரம் ஜே.எஸ்.நகர், சுந்தர் நகர், சுந்தரம் நகர், பொன்னான்டி நகர், வீர நாயக்கன் தட்டு, காலாங்கரை, திருச்செந்தூர் மெயின்ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.