நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
தேனி, சின்னமனூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தேனி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உப்பார்பட்டி மின்தொடர், தோப்புப்பட்டி மின்தொடர் ஆகிய பகுதிகளில் மிகவும் அவசியமான பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், ஆதிப்பட்டி, போடி ரோடு ஒத்தவீடு ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதுபோல், ராசிங்காபுரம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட டி.ரெங்கநாதபுரம் மின்தொடரில் மட்டும் மிகவும் அவசியமான பராமரிப்பு பணிகள் நடப்பதால் டி.ராமகிருஷ்ணாபுரம், டி.புதுக்கோட்டை, குப்பணாசாரிபட்டி, திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் வினியாகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அதேபோன்று, சின்னமனூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மின்பாதைகளில் தாழ்வாக உள்ள இடங்களில் மின்கம்பங்கள் ஊன்றுவதற்கான பணிகள் நாளை மறுநாள் நடக்கின்றன. இதனால், சின்னமனூர், துரைச்சாமிபுரம், பல்லவராயன்பட்டி, சின்னஓவுலாபுரம், தென்பழனி, அப்பிப்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், லோயர்கேம்ப், காமயகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. இத்தகவல்களை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.