10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு மார்ச் 20-ந்தேதி தொடங்குகிறது முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு மார்ச் 20-ந்தேதி தொடங்குகிறது என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு மார்ச் 20-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெற உள்ளது. எனவே தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் தவறாமல் செய்முறை தேர்வில் கலந்து கொண்டு எழுத வேண்டும். மேலும் இது குறித்த அறிவிப்புகள் எதுவும் கிடைக்கப் பெறாதவர்கள், இந்த அறிக்கையை தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரை அணுகி தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story