பிரேமலதா 20 நாட்கள் சூறாவளி பிரசாரம்: நாளை தொடங்குகிறார்


பிரேமலதா 20 நாட்கள் சூறாவளி பிரசாரம்: நாளை தொடங்குகிறார்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 27 March 2024 7:33 PM GMT (Updated: 27 March 2024 11:11 PM GMT)

அ.தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கிறது. இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் தே.மு.தி.க., அ.தி.மு.க. மற்றும் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 20 நாட்கள் தொடர்ச்சியாக சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார்.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோட்டில் நாளை பிரசாரம் செய்கிறார். இதேபோல 30-ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலத்திலும், 31-ந் தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரத்திலும், ஏப்ரல் 1-ந் தேதி பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சியிலும், 2-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணத்திலும், 3-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை திருவள்ளூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூரிலும் வாக்கு சேகரிக்கிறார்.

5-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னையிலும், 7-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை கடலூரிலும், 9-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூரிலும், 11-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியிலும், 12-ந் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்லிலும், 13-ந் தேதி கரூர், நாமக்கல், தேனியிலும், 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மதுரை, தென்காசி, விருதுநகரிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.


Next Story