ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்திற்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நியமனம்


ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்திற்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நியமனம்
x

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்திற்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் நியமனம் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு.

சென்னை,

இந்திய ஜனாதிபதி தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை பொது செயலாளர் பி.சி.மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலை நடத்துவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டசபை செயலாளரை தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சட்டசபை செயலாளரை வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமித்து இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதற்கான அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன், தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாகவும், வாக்குச்சாவடி தலைமை அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் இடமாக, சென்னை தலைமைச் செயலக பிரதான கட்டிடத்தில் உள்ள குழு அறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.


Next Story