சிறையில் கைதிக்கு கொரோனா


சிறையில் கைதிக்கு கொரோனா
x

நாகர்கோவிலில் சிறையில் கைதிக்கு கொரோனா

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

கன்னியாகுமரி பரமார்த்தலிங்க புரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் சிறையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிறை கைதி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story