பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு


பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு
x

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 155 மையங்களில் நேற்று பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது.

திண்டுக்கல்

பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்னும் 2 வாரங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரையும் நடைபெறுகிறது.

இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் பட்டியல் மாவட்ட வாரியாக தயாரிக்கப்பட்டது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-1 பொதுத்தேர்வை 9 ஆயிரத்து 801 மாணவர்கள், 11 ஆயிரத்து 529 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 330 பேர் எழுதுகின்றனர்.

செய்முறை தேர்வு

அதேபோல் பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 370 மாணவர்கள், 12 ஆயிரத்து 340 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 710 பேர் எழுதுகின்றனர். இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் தொடங்கியது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளின் வசதிக்காக மொத்தம் 155 செய்முறை தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அந்த மையங்களில் நேற்று செய்முறை தேர்வு நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story