உதவி கலெக்டர் அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகை


உதவி கலெக்டர் அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகை
x
தினத்தந்தி 25 Jan 2023 7:00 PM GMT (Updated: 2023-01-26T00:30:53+05:30)

உதவி கலெக்டர் அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகை செய்தனர்.

நாகப்பட்டினம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் கழிவை கலந்தவர்களை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட போலீசார் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று அறிவித்தபடி காங்கிரஸ் கட்சியினர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் இரட்டை குவளை முறையை ஒழிக்க வேண்டும். குடிநீர் தொட்டியில் கழிவுகளை கலந்த மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story