கவர்னரை கண்டித்து போராட்டம்
மாவட்டத்தில் கவர்னரை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
தமிழக கவர்னர் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், ராஜபாளையம் ஆகிய 5 போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 பேர் கலந்து கொண்டனர். மேலும் விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன் தலைமையில் கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக 7 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story