பள்ளியாடி பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


பள்ளியாடி பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

பள்ளியாடி பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கன்னியாகுமரி

தக்கலை. ஜூன்.7-

பள்ளியாடி பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை

முளகுமூடு பேரூராட்சி பகுதியான துண்டத்து விளையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்வதற்கு பொது பாதை உள்ளது. இந்த பாதைக்காக 5½ சென்ட் நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒரு நபர் தானமாக கொடுத்துள்ளார். இந்தநிலையில் அந்த நிலத்தை ஒட்டிய 10 சென்ட் நிலத்தை அவர் ஒருவருக்கு விற்றுள்ளார். இந்தநிலையில் நிலத்தை வாங்கிய நபர் பொதுப்பாதைக்கான நிலத்தையும் சேர்த்து பத்திரப்பதிவு செய்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த பொதுமக்கள் முளகுமூடு பேரூராட்சி தலைவர் ஜெனுஷா ஜோண் தலைமையில் நேற்று பள்ளியாடி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சார்பதிவாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் முளகுமூடு பேரூராட்சி சார்பில் தலைவர், சார்பதிவாளரிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், பேரூராட்சிக்கு சொந்தமான பொதுப் பாதையை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக சார்பதிவாளர் கூறியதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story