காவடிகளுடன் நகரத்தார் பாதயாத்திரை


காவடிகளுடன் நகரத்தார் பாதயாத்திரை
x

காவடிகளுடன் நகரத்தார் பாதயாத்திரை நடந்தது.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள சொக்கநாதபுரத்தில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு உலக அமைதிக்காகவும் கொரோனா போன்ற தொற்றுகளில் இருந்து மக்கள் விடுபடவும் நகரத்தார் திருப்பரங்குன்றம் பாதயாத்திரை குழு சார்பில் 28-வது ஆண்டு பாதயாத்திரை நேற்று காலை சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கவிஞர் அப்பச்சி சபாபதி தலைமையில் சென்றது. வெள்ளையப்பன் செட்டி யார், அண்ணாமலை செட்டியார் முன்னிலை வகித்தனர். ஆயிரக்கணக்கானோர் காவடி சுமந்து பாத யாத்திரையாக புறப்பட்டு சென்றனர். இந்த குழுவினர் தினசரி மதியம் வேல் பூஜை செய்து வழிபடுகிறார்கள். சொக்கநாதபுரத்தில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை முதல் நாள் சீனமங்கலம், 2-வது நாள் முத்துப்பட்டி, 3-ம் நாள் மடப்புரம், 4-ம் நாள் திருப் பரங்குன்றம் என 4 நாட்களிலும் வேல் பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதன் சிறப்பு நிகழ்ச்சியாக 2-ம் நாளான 22-ந் தேதி வெள்ளிக் கிழமை பகல் 11 மணி அளவில் முத்துப்பட்டியில் உள்ள குழந்தை வரம் அருளும் முருகப் பெருமானின் 16-வது படை வீடாகிய சக்தி முருகன் ஆலயத்தில் முருகப் பெருமானை ஊஞ்சலில் வைத்து ஆட்டி வழிபடுகிறார்கள்.

குழந்தைவரம் வேண்டி வருபவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்பது உண்மை என நம்பப்படுகிறது. வருகிற 24-ந் தேதி காலை திருப்பரங்குன்றம் சேரும் இந்த குழுவினர் அன்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் பால்குடம், 40 காவடிகளுடன் கிரிவலம் வந்து காவடி செலுத்துகிறார்கள். அன்று இரவு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.


Next Story