தூத்துக்குடியில் 72 ஆக்கிரமிப்புகள் அகற்றம்


தூத்துக்குடியில் 72 ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

தூத்துக்குடியில் 72 ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று ஸ்டேட் வங்கி காலனி 60 அடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தலைமையில், உதவி ஆணையாளர் தனசிங், உதவி பொறியாளர் காந்திமதி மற்றும் அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த சுமார் 72 ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.31 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சாலையின் ஓரத்தில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் இந்த நடைமேடை முழுவதும் கடைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் பாதசாரிகள் ரோட்டின் நடுவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் உருவாகி வருகிறது. ஆகையால் நடைமேடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story