களக்காட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


களக்காட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

களக்காட்டில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அண்ணா சாலையில் உள்ள சில கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக களக்காடு நகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கே.எஸ்.கண்மணி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் ஊழியர்கள் சென்று ஆய்வு செய்தனர். இதில் 3 கடைகளின் முன்பு வாறுகாலின் மேல்பகுதியை ஆக்கிரமித்து படிகள் உள்ளிட்டவை கட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆக்கிரமிப்புகளை ஊழியர்கள் அகற்றினர்.


Next Story