கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:57+05:30)

தேனி நகரில் கடை வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தேனி

தேனி நகரின் முக்கிய கடைவீதியாக பகவதியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வந்ததால் நகராட்சி நிர்வாகம் தரப்பில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த சில மாதங்களில் 2 முறை நோட்டீஸ் வழங்கப்பட்ட போதிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது.

பெரும்பாலான ஆக்கிரமிப்பு கடைகளை அதன் உரிமையாளர்களே அகற்றிக் கொண்டனர். மேலும், தெருவோர மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளும் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டன. பணி நடந்து கொண்டு இருந்த போது பொக்லைன் எந்திரம் பழுதானது. இதனால் நகராட்சி பணியாளர்கள் கடப்பாரை மூலம் படிக்கட்டுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்க தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story