ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் நல சங்க கூட்டம்


ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் நல சங்க கூட்டம்
x

ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் நல சங்க கூட்டம் நடந்தது.

கரூர்

கரூரில் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் நல சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இந்திய குடியரசுத்தலைவர் கொடி சின்னத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவால், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோரிடம் கொடுக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிப்பது, காவல்துறை கேன்டீனில் மலிவு விலையில் மருந்துகள் வழங்குவது, 7-வது ஊதியக்குழுவில் வழங்கப்பட்ட சம்பள விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்வது, மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி வரும் வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கந்தசாமி, செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் வேலுசாமி, துணைத்தலைவர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story