குடிநீர் கேட்டு சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலசெம்மங்குடி கிராமத்திற்கு ஒரு வாரமாக குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கிராம நாட்டாமை செந்தமிழன் தலைமை தாங்கினார். விவசாய சங்க பிரதிநிதிகள் சங்கர், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலைய வகித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இந்த சாலை மறியல் போராட்டம் குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்க உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story