அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்த கோரி சாலை மறியல் -15 பெண்கள் உள்பட 45 பேர் கைது

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்த கோரி சாலை மறியல் -15 பெண்கள் உள்பட 45 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்த கோரி சாலை மறியல் நடந்தது. இதைதொடர்ந்து 10 பெண்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

சிவகங்கை,

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்த கோரி சாலை மறியல் நடந்தது. இதைதொடர்ந்து 10 பெண்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம்

சிவகங்கை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்த முடியாது என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா தலைமையில் சிவகங்கையில் அரண்மனை வாசலில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கைது

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் காளை லிங்கம், மாவட்ட துணை தலைவர் சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வக்கீல் மருது உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். இதைதொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story