வெள்ளித்திருப்பூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


வெள்ளித்திருப்பூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

வெள்ளித்திருப்பூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள கொமராயனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொமராயனூர் காலணியில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 10 நாட்களாக இப்பகுதியில் கழிவு நீர் வடிகால் வசதிக்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் குடிநீர் முறையாக கிடைப்பதில்லை என்று கூறி பொதுமக்கள் அந்த பகுதியில் செல்லும் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஊராட்சி தலைவர் விஜயராமு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த ெபாதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கழிவுநீர் வடிகால் வசதி பணிகள் நடைபெறுவதால்தான் குடிநீர் வினியோகிக்க முடிவில்லை. உடனே குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளித்ததார்கள். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story