பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு


பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு
x

பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணி தொடங்கி 15 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக நிறைவடையாத நிலையில் ஆங்காங்கே அவ்வப்போது கழிவு நீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. விருதுநகர் தந்திமர தெருவில் ஏற்கனவே கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறிய நிலையில் அங்கு ஒரு சிறு பாலம் அமைக்கப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. ஆனால் தற்போது பாதாள சாக்கடை கழிவுநீர் ஆள் இறங்கும் குழிகள் வழியாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகமும் இதை உடனடியாக கண்டறிந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்காத நிலையில் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே நகராட்சி சுகாதாரத்துறை இதனை முறையாக கண்காணித்து கழிவுநீர் வெளியேறும் பட்சத்தில் அப்பகுதியை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.



Next Story