புனித அலோசியஸ் பள்ளி ஆண்டு விழா


புனித அலோசியஸ் பள்ளி ஆண்டு விழா
x

தெற்கு கள்ளிகுளம் புனித அலோசியஸ் பள்ளி ஆண்டு விழா நடந்தது

திருநெல்வேலி

வள்ளியூர் தெற்கு:

தெற்கு கள்ளிகுளம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் 66-வது விளையாட்டு விழா நடந்தது. உதவி பங்குதந்தை ஒலிம்பிக் தீபம் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி ஆண்டு விழா நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் பெர்டினான்ட் மோரிஸ் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி செல்வி ஆண்டறிகை வாசித்தார். வள்ளியூர் டி.ஜே.ஆர். கன்ஸக்சன் உரிமையாளர் தேவேந்திரன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த், வள்ளியூர் டி.டி.என். கல்விக்குழும உரிமையாளர் டி.டி.என்.லாரன்ஸ் கல்வி பரிசு வழங்கி சிறப்புரையாற்றினர். முனைவர் ஜெரால்டு ரவி ஆசியுரை வழங்கினார். முடிவில், உடற்கல்வி ஆசிரியர் அலெக்ஸ் ரெனோ நன்றி கூறினார்.


Next Story