பெண் டாக்டரின் ஸ்கூட்டர் திருட்டு


பெண் டாக்டரின் ஸ்கூட்டர் திருட்டு
x

தஞ்சையில் பெண் டாக்டரின் ஸ்கூட்டர் திருட்டு போனது

தஞ்சாவூர்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் விஜயா நகர் பகுதியை சேர்ந்தவர் கவுரிராஜன் மகள் பவித்ரா(வயது 25). இவர், தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் தனது ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது ஸ்கூட்டரை யாரோ திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து ஸ்கூட்டரை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.






Next Story