விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு
வடசெட்டியந்தல் கிராமத்தில் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள வடசெட்டியந்தல் கிராமத்தில் வேளாண்மை துறை மூலமாக தனியார் வயலில் மணிலா விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறையின் உதவி இயக்குனர் கதிரேசன் ஆய்வு செய்து மணிலா அதிகப்படியான மகசூல் பெறுவதற்கான களைக்கட்டுப்பாடு, பூச்சி நோய் கட்டுப்பாடு மற்றும் நுண்ணூட்டங்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளிடம் விளக்கி கூறினார். தொடர்ந்து சங்கராபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மணிலா மற்றும் உளுந்து விதைகளில் சான்று பணி அட்டை பொருத்தும் பணி நடைபெறுவதை ஆய்வு செய்தார். அப்போது சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி, விதைசான்று அலுவலர் தேவி, உதவி விதை அலுவலர்கள் முருகேசன், துரை, கிடங்கு மேலாளர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story