கருத்தரங்கம்
சிறு, குறு தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்
இட்டமொழி:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ ஏற்பாட்டில், சிறு குறு நடுத்தர தொழில்கள், சுயதொழில், விவசாய தொழில் செய்வோருக்கான பயிற்சி முகாம், நாங்குநேரி-களக்காடு ரோடு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், மாவட்ட சிறு குறு தொழில்கள் சங்கம், செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி, தமிழ்நாடு சிறு குறு கிராமிய தொழில் முனைவோர் சங்கத்தின் ெநல்லை கிளை உதவியோடு, மாவட்ட தொழில் மையம், எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிறுவனம் மற்றும் வங்கிகள் ஆதரவுடன் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.லாபகரமான தொழில்களை தொடங்குவது, வங்கிகளில் கடனுதவி, அரசின் மானியம் பெறுவது, அனுமதி பெறுவது, தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவது குறித்து விளக்கி கூறப்பட்டது. பல்வேறு பொருட்களை தயாரிப்பது குறித்தும் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. சுயதொழில் தொடங்க கடனுதவி கேட்டு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு கடனுதவிக்கான ஆணைகளை சபாநாயகர் அப்பாவு, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினர். சிறு, குறு நடுத்தர கிராமிய தொழில்கள் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த படித்த, படிக்காத, அனுபவம் உள்ள சுயதொழில் செய்வோர், தொழில் செய்ய விரும்புவோர், விவசாயம் மற்றும் கால்நடை தொழில்களில் ஈடுபட விரும்புவோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.