ரூ.29 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், சாலை அமைப்பு


ரூ.29 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், சாலை அமைப்பு
x
தினத்தந்தி 30 Oct 2022 6:45 PM GMT (Updated: 30 Oct 2022 6:45 PM GMT)

ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ரூ.29 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், இன்டர்லாக் கற்கள் பதித்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

நீலகிரி

ஸ்ரீ மதுரை,

ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ரூ.29 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், இன்டர்லாக் கற்கள் பதித்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

ரூ.17 லட்சத்தில் கால்வாய்

கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட ஏச்சம்வயல் மேலம்பலம் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. பல ஆண்டுகளாகவே கழிவுநீர் செல்வதற்கு முறையான கால்வாய் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இதைத்தொடர்ந்து ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 450 மீட்டர் தூரத்துக்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது கால்வாய் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து உள்ளது. இதனால் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மக்கள் மகிழ்ச்சி

இதேபோல் புத்தூர்வயலில் பிரசித்தி பெற்ற மகாவிஷ்ணு கோவிலுக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். தொடர்ந்து சாலையை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையொட்டி ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 300 மீட்டர் தூரத்துக்கு இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் சுனில் கூறும்போது, மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ரூ.29 லட்சம் செலவில் மேலம்பலம் பகுதியில் கழிவுநீர் கால்வாயும், புத்தூர்வயலில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்ட சாலையும் அமைக்கப்பட்டது என்றார்.


Next Story